×

2,500 கோடி முதலீட்டில் தகவல் தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: அம்பத்தூரில் 2,500 கோடி முதலீட்டில் தகவல் தரவு மையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, முகாம் அலுவலகத்தில் இருந்து அம்பத்தூரில் 2,500 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள என்டிடி க்ளோபல் டேட்டா சென்டர்ஸ் அன்ட் குளோட் இன்பிராஸ்டெக்சர் நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. என்டிடி க்ளோபல் டேட்டா சென்டர்ஸ் அன்ட் குளோட் இன்பிராஸ்டெக்சர் நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20க்கும் மேற்பட்ட நாடுகளில், 160 தகவல் தரவு மையங்களை நிறுவியுள்ளது. இந்நிறுவனம், தகவல் தரவு மையங்கள் அமைத்து செயல்படுத்துவதில் உலகளவில் ஒரு முன்னணி நிறுவனமாகும்.

இந்நிறுவனம்  2,500 கோடி முதலீடு செய்து, 700 பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் தகவல் தரவு மையம் மற்றும் கேபிள் இறங்கு தளங்கள் அமைத்திடும். இந்த திட்டத்தில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டமும் அடங்கும்.  இந்த நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் துறை செயலாளர் முருகானந்தம்,  தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், என்டிடி க்ளோபல் டேட்டா சென்டர்ஸ் அன்ட் குளோட் இன்பிராஸ்டெக்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சரத் சங்கி, அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Information Data Center ,Q. ,Stalin , Chief MK Stalin
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு